105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ TwinThrottlers.com

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இன்று மார்கெட்டிற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை அதிகமாகிவிட்டது. ஏராளமான நிறுவனங்கள் தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மார்கெட்டிற்கு தளம் இறக்கி வருகின்றனர். ஆனால் ஒரு நல்ல எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்குவது என்பத அவ்வளவு ஈசி எல்லாம் இல்லை. இதற்கு அதிகமான பொறுமையும், ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் தேவை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எல்லா நிறுவனங்களாலும் இதைச் சரியாகச் செய்து விட முடியாது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இதை சிம்பிளாக செய்த நிறுவனம் தான் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் “சிம்பிள் எனர்ஜி”. இந்நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவையே அதிர வைத்தது. அதன்படி இந்நிறுவனம் சிம்பிள் ஒன் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கவுள்ளது. இது முழு சார்ஜில் 200 கி.மீ வரை இயங்கும் அதுவும் அதிகபட்சமாக 105 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என அறிவிப்பு வெளியான போது இந்த ஸ்கூட்டருக்கான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் எனர்ஜி இந்த

ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் முன்பே இதற்கா புக்கிங்கை துவங்கியது. வாடிக்கையாளர்கள் எல்லாம் இந்த நிறுவனத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்ததன் காரணமாக சுமார் 50,000 ஸ்கூட்டர்களுக்கான புக்கிங் குவிந்தது. பலர் இந்த ஸ்கூட்டருக்காக காத்திருக்கின்றன நிலையில் இந்த ஸ்கூட்டர் தயாராகிவிட்டது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இந்நிலையில் தான் இந்த ஸ்கூட்டரை டிரைவ்ஸ்பார்க் குழுவாகிய நாங்கள் ஓட்டிப்பார்த்தோம். கிட்டத்தட்டத் தயாரிப்புக்கு வரும் டிசைனில் உள்ள ஒரு ஸ்கூட்டரை தான் ஓட்டிப்பார்த்தோம். இது பல அற்புதமான அனுபவங்களைத் தந்ததது. இது குறித்த ரிவியூவை கீழே வழங்கியுள்ளோம் காணுங்கள்

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் ஒன் டிசைன் மற்றும் ஸ்டைல்

இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை பார்த்ததும் நமக்குத் தோன்றுவது மூன்று விஷயங்கள், ஃப்யூச்சரிஸ்டிக், ஷார்ப் மற்றும் சுறுசுறுப்பு. பைக் முழுவதும் ஆங்குலர் டிசைன் லைன் காணப்படுகிறது. இது பார்க்க நல்ல லுக்கை தருகிறது. முன்பக்கத்தில் முக்கோண வடிவில் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க ஸ்டைலாகவும் பிரிமியமாகவும் இருக்கிறது. ஒட்டு மொத்த முகப்பு டிசைனே ஒரு முக்கோண வடிவில் தான் அமைக்கப்பட்டுள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இதன் ஹெட்லைட் டிசைன் ஏரோ டைனமிக்ஸ்சிற்கு ஏற்றார் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது முன்பக்கத்தில் உள்ள காற்றை உள்ள இழுத்து பின்பக்கம் வழியாக வெளியே தள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குள்ளேயே இன்டிகேட்டர் டிசைனும் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க மட்கார்டு தனித்துவமான டிசைனை வழங்கியுள்ளது. இது சதுர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மார்கெட்டில் உள்ள மற்ற ஸ்கூட்டர்களில் இது சதுர வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

கண்களுக்கு மேலே இருக்கும் புருவம் போன்ற அமைப்பில் எல்இடி டிஆர்எல்கள் ஹேண்டில் பாரில் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டிலிருந்து பார்க்கும் போது நம் கவனத்தை முதலில் ஈர்ப்பது 12 இன்ச் அலாய் வீல் தான். இதன் தனித்துவமான ஸ்டார் வடிவ டிசைன் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

பக்கவாட்டில் பாடி பேனல்களும் ஆங்குலர் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆங்காங்கே கருப்பு நிற டிசைனும் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லா கலர் ஆப்ஷன்களிலும் சிறப்பாக இருக்கிறது. ஃப்ளோர் போர்டு பிளாட்டாகவும் உயரமாகவும் வழங்கப்பட்டுள்ளது. ஒரே சீட் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. இது பின்புறம் உயரமாகவும், முன்புறம் சரிந்து வந்து உயரம் சற்று குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

பின்புறம் கீழ்ப் பகுதியில் உள்ள ஸ்வீங் ஆர்ம் பார்க்கச் சிறப்பாகவும், சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ளது பெடல் டிஸ்க் பிரேக், மற்றும் தங்க நிற கேலிபர்கள் இந்த இடத்திற்கு மேலும் ஸ்டைலை சேர்க்கிறது. பின்புற டெயில் லைட் பார்க்கச் சிறப்பாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையிலும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிம்பிள் ஒன்ற ஒரு யூத்ஃபுல் அம்சங்கள் நிறைந்த, ஃப்யூச்சரிஸ்டிக் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் கொண்ட ஸ்கூட்டாராக வந்துள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் ஒன் அம்சங்கள்

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ள அம்சங்களைப் பார்த்தால் எல்லோரையும் ஈர்க்கும் விதமாக அமையும். இதன் ஹெட்லைட், டிஆர்எல், இண்டிகேட்டர், டெயில் லைட் எல்லாம் எல்இடியில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் தயாரிப்பு ஃபிட் மற்றும் ஃபினிஷ் தயாரிப்பில் மேம்படுத்தப்படும்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

நாங்கள் ப்ரி புரோடெக்ஷன் ஸ்கூட்டரை தான் ஓட்டிப்பார்த்தோம். இதில் உள்ள மெக்கானிக்கல் அம்சங்கள் எல்லாம் தயாரிப்பில் அப்படியே பயன்படுத்தப்படவுள்ளது. ஆனால் இதில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாடி பேனல்கள் ப்ரீ புரோடெக்ஷன் ஸ்டேஜிலேயே இருக்கிறது. இதில் கொடுக்கப்பட்ட ஸ்விட்ச்களும் ப்ரீ புரோடெக்ஷன் ஸ்டேஜ்களிலேயே இருக்கிறது. அதனால் இந்த பகுதிகள் குறித்த எங்கள் கருத்துக்களை இப்பொழுது தெரிவிக்கவில்லை. முழுமையாக ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டதும் இது குறித்து ரிவியூ செய்கிறோம்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இந்த பைக்கில் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பொருத்தப்பட்டுள்ளது. டச் ஸ்கிரின் சிறப்பாக ரெஸ்பான்ஸ் செய்கிறது. நாங்கள் ரைடு செய்த ஸ்கூட்டரில் உள்ள சாஃப்ட்வேரின் பீட்டா வெர்ஷன் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறைவான அம்சங்களே இருந்தது. ஆனால் முழுமையான சாஃப்ட்வேரில் ஏராளமான தகவல்கள் வரவுள்ளன. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், சராசரி ஸ்பீடு இன்டிகேட்டர், ரேஞ்ச் விபரம், பேட்டரி சார்ஜ் விபரம் உள்ளிட்ட தகவல்கள் டிஸ்பிளேவில் வரும். மற்ற ஸ்கூட்டரில் இல்லாத ஒரு அம்சம் என்றால் இதில் பேட்டரியின் ஹெல்த் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

பேட்டரி ஹெல்த்களை காட்டுவது மிகவும் உபயோகமான இருக்கும். இதனால் ரைடருக்கு பேட்டரி கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும். பேட்டரி சூடாக இருந்தால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இது போக இந்த ஸ்கிரீனில் ரைடு மோடுகள் இருக்கிறது. இது போக ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கும் வசதியும் இருக்கிறது. ப்ளுடூத் வைஃபை இணைப்பு வசதிகளும் உள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மேப் மை இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மேப் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் வழிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இது போக கனெக்ட்டட் அம்சங்களான ரிமோட் ஆக்சஸ், ஜியோ ஃபென்சிங், OTA அப்டேட், ரூட்களை சேமிப்பது, பகிர்வது, ரைடு குறித்த தகவல்கள், ரிமோட் லாக்கிங் உள்ளிட்ட அம்சங்களைப் பெற முடியும். இது போக இதில் ரைடர்கள் தங்கள் டாக்குமெண்ட்களான வாகனப் பதிவுச் சான்று, டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், உள்ளிட்டவற்றைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இது போக இந்த பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் மோடு வசதிகள் இருக்கிறது. மொத்தத்தில் அம்சங்களைப் பொருத்தவரை இந்த பைக்கில் எந்த அம்சமும் குறைவில்லாமல் இருக்கிறது. இந்த இடத்தில் சிம்பிள் என்ர்ஜி சிறப்பான வேலைகளைச் செய்துள்ளது. தயாரிப்பில் தரமான பிளாஸ்டிக் மற்றும் சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டுவிட்டால் சிறப்பாக இருக்கும்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

செயல்திறன் மற்றும் ஸ்பெசிஃபிகேஷன்

இது ரிவியூ செய்வதற்கான சிறப்பான பகுதி, சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் சிறப்பான செயல் திறனை பெற்றுள்ளது. சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்த பைக்கில் பொருத்தப்பட்ட இன்ஜின் அதிக டார்க் சைஸ் ரேஷியோஉடன் இருப்பதாகக் கூறுகிறது. இந்த மோட்டார் பின்பக்க வீலுடன் பெல்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இந்த பைக் கடந்தாண்டு அறிமுகமாகும் போது இது செயினில் இயங்கும்படி டிசைன் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக நடந்த மேம்பாடுகளில் இந்நிறுவனம் இந்த பைக்கை வாங்குபவர்கள் பராமரிப்பு செலவு குறைவாக இருக்க வேண்டும் எனகருதுவார்கள். பெல்ட் தான் செயினை விடக் குறைவான பராமரிப்பு செலவு என்பதால் பெல்ட் டிரைவ்விற்கு மாற்றிவிட்டது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இதில் உள்ள மோட்டாரை பொருத்தவரை 4.5KWபவர் நாமினல் பவராக இருக்கிறது. இது அதிகபட்சமாக 8.4KW பவரை கொண்டது. இது அதிகபட்சமாக 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டர் 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.77 நொடிகளில் அடைந்துவிடுகிறது. அதாவது 0-40 வேகத்தை விரைவாக எட்டி பிடிப்பதில் இந்தியாவிலேயே வேகமான ஸ்கூட்டராக இது இருக்கிறது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

நாங்கள் 0-60, 0-80, 0-100 ஆகிய வேகங்களில் இந்த ஸ்கூட்டரை ஓட்டிப்போர்த்தால் எல்லாவற்றிலும் சிறப்பாக ஃபெர்பார்ம் செய்தது. இந்த பைக்கில் உள்ள சோனிக் மோடில் வேகமாக பைக்கை 30 நிமிடம் வரை ஓட்டினோம். அதன்பின் பைக் ஸ்லோ ஆகவில்லை. மேலும் லோ பெர்ஃபாமென்ஸ் மோட்டிற்கும் செல்லவில்லை.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

மோட்களை பொருத்தவரை சிம்பிள் ஒன் எலெக்டரிக் ஸ்கூட்டரில் மொத்தம் 4 விதமான மோட்கள் இருந்தன. எக்கோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் ஆகிய மோட்கள் இருந்தன. ஒவ்வொரு ரைடிற்கும் செயல்திறன். ரேஞ்ச் எல்லாமே மாறுபடும். இதனால் இதை ஒவ்வொருவரும் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

எக்கோ மோடில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 200 கி.மீ வரைபயணிக்கும் ரேஞ்ச் கொண்டது. இதில் வேகம் 50கி.மீ வேகம் வரை தான் லிமிட் செய்யப்பட்டுள்ளது. முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்றால் இந்த மோட் சிறந்ததாக இருக்கும். ரைடு மோட்டைப் பொருத்தவரை ரேஞ்ச் 160 கி.மீ ஆகக் குறைந்துவிடும். ஆனால் பைக்கின் வேகம் 70 கி.மீ வேகத்திற்கு லிமிட் செய்யப்பட்டுள்ளது. நகர்ப் புற பயன்பாடு இல்லாமல் நகர்ப் புறங்களுக்கு வெளியே பயணிக்க இந்த மோடு சிறந்தது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

அடுத்ததாக டேஷ் மோடு இதை விடச் சற்று வேகமாகப் பயணிக்க முடியும் 85 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம். ஆனால் இதன் ரேஞ்ச் 120 கீ.மீ ஆகக் குறைந்துவிடும். அதிக செயல் திறன் கொண்ட மோடு என்றால் சோனிக் மோடுதான் இதில் அதிகபட்சம் 105 கி.மீ வேகத்தில் பயணிக்கலாம். ஆனால் இதை ரேஞ்ச் வெறும் 85 கி.மீ தான் கொடுக்கும்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை வித்தியாசமான பேட்டரி செட்டப் இருக்கிறது. ஃபிக்சட் பேட்டரியாக 3.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ரீமூவபிள் பேட்டரியை பொருத்தவரை 1.5kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் இந்த பைக் 4.8kWh பேட்டரி இருக்கிறது. ரீமூவபிள் பேட்டரி என்பது பயணிகளின் வசதிக்காவும், ஃபிக்சட் பேட்டரி நம்பகத் தன்மைக்காகவும் வழங்கப்படுகிறது. ரிமூவ் செய்யக்கூடிய பேட்டரி இல்லாமலும் பைக்கை இயக்க முடியும். அதற்குத் தகுந்தார் போல் ரேஞ்ச் குறையும்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

ரீமூவபிள் பேட்டரி பேக் பைக்கின் சீட்டிற்குக் கீழே எளிதாகக் கழட்டி மாட்டும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போக சீட்டிற்கு அடியில் 30 லிட்டர் அளவிலான இடம் இருக்கிறது. இதில் முழு ஹெல்மெட் அல்லது மற்றொரு பேட்டரியை எடுத்துச் செல்ல முடியும். ஆம் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எக்ஸ்ட்ரா ரிமூவபிள் பேட்டரியை ரூ30 ஆயிரம் முன்பணத்தில் வழங்குகிறது. இந்த எக்ஸ்ட்ரா பேட்டரியுடன் சேர்த்து 6.4 kWh பேட்டரி கேப்பாசிட்டி இருக்கிறது. இந்த எக்ஸ்ட்ரா பேட்டரியுடன் பயணித்தால் எக்கோ மோட்டில் முழு சார்ஜில் 300 கி.மீ வரை பயணிக்கலாம்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் போடுவது ஒன்றும் கஷ்டமான காரும் இல்லை. இந்த பைக் உடன் ஸ்டாண்ட்ர்டு சார்ஜர் வருகிறது. இது பைக்கை முழுமையாக சார்ஜ் ஏற்ற 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும். இது போக சிம்பிள் எனர்ஜின நிறுவனம் தனியாக 1.4kW சார்ஜரை எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தால் வழங்குகிறது. இதன் விலை ரூ15,499 தான். இந்த சார்ஜர் 2 மணி நேரத்தில் இரண்டு பேட்டரியையும் சார்ஜ் ஏற்றிவிடும். ரிமூவபிள் பேட்டரி 75 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

பைக்கின் முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த ஸ்கூட்டரில் தரமான சாலையில் மட்டும்தான் ஓட்டிப்பார்த்தோம். அதனால் இது கரடு முரடான சாலைகளிலும், குண்டும் குழியுமான ரோடுகளிலும் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இதன் தரத்தைப் பார்க்கும் போது சிறப்பாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் ஒன் எலெக்டரிக் ஸ்கூட்டரை கையாள்வது சிறப்பாக இருக்கிறது. குறிப்பாகக் குறுகலான ரோடுகளில் கையாள சுலபமாக இருந்தது. நாங்கள் கேட்டட் கம்யூனிட்டி பகுதியில் ஓட்டி பார்த்தோம். அதன் சிறந்த பெர்பாமென்ஸை வழங்கியது. இதன் பிரேக்கை பொருத்தவரை 200 மிமீ டிஸ்க் முன்பகுதியிலும் 190 மிமீ டிஸ்க் பின்பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது நல்ல பவர்புல் பிரேக்கிங் சிஸ்டத்தை வழங்குகிறது. சிம்பிள் எனர்ஜிக்காக Brembo நிறுவனம் தனித்துவமான பிரேக்களை தயார் செய்து வழங்குகிறது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இந்த ஸ்கூட்டரில் எபிஎஸ் இல்லை. இது சாலையில் ஸ்கூட்டரை வளைத்து நெளித்து ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் உள்ள முக்கியமான அம்சம் பிரேக்கை பிடிக்கும் போது அது த்ராட்டலை கட்-ஆப் செய்யாது. பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களில் லேசாக பிரேக் பிடித்தால் கூட த்ராட்டல் கட்டாகிவிடும். ஆனால் இந்த பைக்கில் அப்படி இல்லை இதே தொழிற்நுட்பம் எல்லா இவி வாகனங்களிலும் வேண்டும் எனப் பலர் எதிர்பார்க்கின்றனர்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

மொத்தத்தில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கையாள்வதிலும் சிரி, ஒட்டு மொத்தமாக மிஷினிலும் சரி சிறப்பான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. மற்ற எலெக்டரிக் ஸ்கூட்டர்களை விடச் சிறப்பான ரேஞ்ச், மற்றும் வேகத்தை ஒப்பிடும் போது இந்த ஸ்கூட்டர்தான் வின்னர் எனச் சொல்லலாம்.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இது ரூ1.10 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது இது வே எக்ஸ்ட்ரா பேட்டரி சேர்த்தால் ரூ1.40 லட்சமாக இதை விலை அதிகரிக்கும். இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் , நம்ம ரெட், அசூர் ப்ளு, ப்ரேசன் பிளாக், க்ரேஸ் ஒயிட் ஆகிய நிற ஆப்ஷன்களின் விற்பனைக்கு வரவுள்ளது. அத்தனை கலரும் சிறப்பாக இருக்கிறது. முக்கியமாக நம்மரெட் கண்களைக் கவரும் வகையில் உள்ளது.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

இன்று மார்கெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் பிரச்சனையே அவர்கள் தங்கள் சொல்லும் வார்த்தையைக் காப்பாற்றுவதில்லை என்பது தான். சில ஸ்கூட்டர்கள் தரத்தில் திருப்திகரமாக இல்லை. சில ஸ்கூட்டர் ரேஞ்ச் திருப்திகரமாக இல்லை. சில ஸ்கூட்டர்கள் செயல் திறன், ஹேண்டிலிங் போன்ற விஷயங்களில் திருப்திகரமாக இல்லை.

105 கி.மீ வேகம், 200 கி.மீ ரேஞ்ச் எனப் பட்டாசு கிளப்பும் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிவியூ

ஆனால் சிம்பிள் ஒன் இவை எல்லாவற்றையும் தாண்டி மெக்கானிக்கல் ரீதியிலும் சரி,செயல் திறன் விஷயத்திலும் சரி, ரேஞ்ச் விஷயத்திலும் சரி சிம்பிள் எனர்ஜி சொன்ன வாதையைக் காப்பாற்றுகிறது. இந்த ஸ்கூட்டரை ரியல் வேர்டில் ஓட்ட ஆர்வமாக இருக்கிறது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
Source link

Leave a Comment